கொரோனாவுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணி

கொழும்பு, பெப் 9: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி புதன்கிழமை பொது பேரணியொன்றை நடத்தவுள்ளது.

அனுராதபுரம் சல்காடோ மைதானத்தில், புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் பேரணியில் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் உள்ளுராட்சி தேர்தலை இலக்கு வைத்து இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.

Leave a Reply