
கொழும்பு, பெப் 9: இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. இந்த சந்திப்புடன், ஜி.எல்.பீரிஸின் இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் முடிவுக்கு வந்தது.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, தனது முதல் பயணத்தை புது தில்லிக்கு ஜி.எல்.பீரிஸ் மேற்கொண்டார்.
முன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய வெளியுறவுச் செயலர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும் ஆகியோரை ஜி.எல்.பீ ரிஸ் டெல்லியில் சந்தித்துப் பேசினார்.





