பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்றக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கடந்த 01 ஆம் திகதி வழங்கி வைத்தார்.
அதற்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், முதலமைச்சின் செயலாளர் (திருமதி) பீ.கலாமதி, கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க, பிரதி பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) (திருமதி) ஆர்.யூ.ஜலீல், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம்.மன்சூர் ஆகியோர்கள் தங்களின் அமைச்சுக் கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.





