
நாட்டில் தற்போது டொலர் தட்டுப்பாடு இல்லை. இறக்குமதி மற்றும் ஏனைய தேவைகளுக்கு போதுமான டொலர் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் டொலர் தட்டுப்பாடு காணப்படுமாயின் கடந்த வருடம் முழுவதும் 22 பில்லியன் அமெரிக்க டொலருக்கு பொருட்கள் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டன? அதுமட்டுமன்றி கடந்த மாதம் 2 பில்லியன் டொலருக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
டொலர் இன்மை காரணமாக நாட்டில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. டொலருக்கான அதிக கேள்வி இருந்ததன் காரணமாகவே டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கான மாற்றுவழிகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
டொலருக்கு அதிக கேள்வி இருப்பது மோசமான விடயம் அல்ல. அதற்காக பொருட்களுக்கான நுகர்வை குறைப்பது சிறந்ததல்ல. டொலரை தேடிக்கொள்வதற்கான மாற்று வழியை தேடுவதே சிறந்தது. – என்றார்.
வடகொரியாவிடம் இருந்து ஆயுத கொள்வனவு – பசிலுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வாய்ப்பு!





