வேறு வழியில்லை: இனி பசுப்பால் உற்பத்திக்கு முன்னுரிமை! – அமைச்சர் தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு பசுப்பாலை திரவ வடிவில் நேரடியாக வழங்குவதே எமது எதிர்கால நோக்கு என கால்நடை அமைச்சர் டி.பி ஹேரத் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பிரச்சினை இருப்பது உண்மை. போசாக்கு தொடர்பான பிரச்சினை காணப்படுகிறது. இனி வரும் காலங்களில் அதிகளவில் பால்மாவை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்படலாம்.

ஏனெனில் டொலர் பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பசுப்பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குறித்த பாலை திரவ வடிவத்திலேயே மக்களுக்கு போசாக்கு குறையமால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மா உணவுப் கட்டுப்பாட்டுப் பிரிவால் பரிசோதனை செய்யப்படுகிறது. எனினும் அதிலும் குறைபாடுகள் காணப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பால் மா யோக்கட் மற்றும் திரவ பாலாக மாற்றப்படுகிறது. இதை விடுத்து பசுப்பால் உற்பத்தியை அதிகரிப்பதே எமது இலக்கு.- என்றார்.

Leave a Reply