எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது மைக் நிறுத்தப்பட்டதா?

தயவு செய்து பாராளுமன்ற சம்பிரதாயங்களை பின்பற்றி நடக்கவும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா சபையில் இன்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்கள், மற்றும் சிறப்புரிமை இங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு முழு பொறுப்பும் சபாநாயகரே. நேற்றும் கூட எனக்குரிய நேரம் சரியாக ஒதுக்கப்படவில்லை. அத்துடன் இடையில் எனது மைக்கும் துண்டிக்கப்பட்டது. இது எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுக்கும் கௌரவமாக?.

அத்துடன் ஊழியர்களின் சேம இலாப நிதி கொள்ளையடிக்கப்படவுள்ளது. இது மக்களின் பணத்தை பட்டப் பகலில் கொள்ளையடிக்கும் செயல். உங்கள் நண்பர்களுக்கு வழங்குவதற்காக இந்த கொள்ளை இடம்பெறுகிறது.- என்றார்.

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனை யாழ். போதனாவில் இடை நிறுத்தம்!

Leave a Reply