சுமந்திரன் மீது வழக்குத் தொடுப்பேன்! – சபையில் டக்ளஸ் சீற்றம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இந்திய மீனவர்களின் தாக்குதலால் உயிரிழந்த உள்ளூர் மீனவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மீனவர்கள் எங்கள் சொத்து, அவர்களை நான் பாதுகாப்பேன். இந்திய மீன்வர்களின் அச்சுறுத்தல் பல ஆண்டு காலமாக நீடிக்கிறது. எமது கடல் எங்கள் மக்களுக்கே சொந்தம்.

இரண்டு உயிர்கள் அண்மையில் யாழ். கடலில் பறிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இந்த உயரிய சபையில் அஞ்சலிகளையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கின்றேன். நான் கடமைக்காக இவற்றை செய்யவில்லை.

எனக்கு எமது மக்களுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்ற உணர்வு உள்ளது. குழம்பிய குட்டையில் நான் மீன்பிடிக்க மாட்டேன். ஏனையவர்கள் போன்று பொறுப்பற்று நடக்க மாட்டேன். இது இரு நாட்டு பிரச்சினை. ஆகவே இராஜதந்திர ரீதியில் நகர்வுகள் மேக்கொள்ளப்படுகின்றன. இழுவைமடி மீன் பிடியால் கடல் வளம் அழிக்கப்படுகிறது.

யாழில் நடைபெறும் மீனவர்களின் போராட்டத்துக்குள் நரிகள் புகுந்துள்ளன. அதை பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். எமது அரசு மூலம் விரைவில் மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும்.

உள்ளூர் இழுவைமடி படகை பயன்படுத்தி மீன்பிடிக்க நான் 5 ஆயிரம் ஒரு படகுக்கு வாங்குவதாக சுமந்திரன் தெரிவித்திருந்தார். அவர் அதனை நீதி மன்றில் நிரூபித்து காட்டட்டும். இது பற்றி வெளியே அவர் கதைத்தால் அவர் மீது வழக்கு தொடுப்பேன். அவருக்கு எதிரான பல வழக்குகளில் நான் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. – என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது மைக் நிறுத்தப்பட்டதா?

Leave a Reply