கிடப்பில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நீதி அமைச்சு நடவடிக்கை!

நாட்டில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு சிறப்பு நீதி குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல வழக்குகள் கிடப்பில் உள்ளன. இது தவிர ஒரு வழக்கு நிறைவடைவதற்கு சுமார் 30 ஆண்டுகள் செல்கின்றன. உதாரணமாக சொல்வதானால் 13 வயதில் துஸ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி ஒருவர், தனது 26 வயதில் எப்படி சாட்சி கூற வருவார்.

அவர் அந்த நிலையில் திருமணம் முடித்து இருக்கலாம். தனது கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் எப்படி நீதிமன்றம் வருவார். இப்படி பல பிரச்சினைகள் உள்ளன.

ஆகவே வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு சட்டத்தரணிகள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை நாம் செய்து தருவோம். விசேட நீதிபதிகள் முன்னிலையில் வழக்குகள் விசாரிக்கப்படும்.

வழக்குகள் முடிவுக்கு வந்தால் வேலை இல்லாமால் போய்விடும் என்று சட்டத்தரணிகள் நினைக்க வேண்டாம். நீதித்துறை சிறப்பாக விரைவாக செயற்பட்டால் எம்மை தேடி மக்கள் வருவார்கள். ஆகவே அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும். – என்றார்.

மீனவர்களை மோதவைக்க இராஜதந்திர நடவடிக்கை: சபையில் டக்ளஸ், சார்ள்ஸ் கருத்து மோதல்

Leave a Reply