
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுகாதாரம் சார்ந்த 16 தொழில் சங்கங்களின் போராட்டத்தால் மருத்துவமனை நடவடிக்கை முற்றாக முடங்கியுள்ளது. போராட்டம் கடந்த 7 ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமானது.
குறிப்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் வழமை போன்று கடமையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மருத்துவர்களால் மருந்து சிட்டை எழுதி கொடுக்கப்பட்டாலும், அந்த மருந்தை கொடுப்பதற்கு பணியாளர்கள் இல்லை.
இந்த நிலையில் 3 தொடக்கம் 7 நாட்களுக்கு தேவையான மருந்துகளை, அரச நிறுவனமான, அரசு ஓசுலவில் பெற்றுக்கொள்வதற்கு நோயாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பாரதூரமான நோய் நிலைமையில் உள்ள மருத்துவ விடுதிகளுக்கு மட்டும் விசேட மருத்துவ சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை!





