தடைசெய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை கடத்திய நபர் கைது!

அநுராதபுரம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் அனுமதிப்பத்திரம் இன்றி தடை செய்யப்பட்ட களைகொல்லிகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளைக் கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவரை கப் வண்டியுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்டியில் 100 கிராம் பூச்சி கொல்லி மருந்துகளின் 14 பொட்டலங்களும், களைகொல்லியில் 230 பொட்டலங்களும் காணப்பட்டுள்ளன.

அத்தோடு, மற்றுமொரு சிறிய பூச்சிகொல்லி பொதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply