
நாட்டில் சமூக வலைத்தளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமூக வலைத்தளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியம் தற்போது உருவாகியுள்ளது. அண்மையில் ஒரு டிக்டொக் காணொளி ஒன்று பார்த்தேன். அது மிக மோசமாக இருந்தது. யார் இதை செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. மக்களுக்கு இவை தான் ரீச் ஆகின்றன. இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும்.
அத்துடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். சிறைக்குள் செல்லும் பலரால் அங்கும் போதைப்பொருள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.- என்றார்.





