மார்ச் மாதம் இலங்கை வருகிறார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஆகியோர் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக
வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமபறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு அழைப்பு
விடுத்துள்ளார்.

இதனை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டுக்காக இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு மார்ச் 30ஆம் திகதி இலங்கையில் நடைபெற உள்ளது. எனினும், பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பாரா என்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply