பிச்சை எடுக்கவா நாட்டை பொறுப்பேற்றீர்கள்! – லக்ஸ்மன் கிரியெல்ல

ஏனைய நாடுகளிடம் பிச்சை எடுக்கவா நாட்டை பொறுப்பேற்றீர்கள் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவிட் தொற்று நோய் உலக நாடுகளுக்கு பொதுவான ஒரு சம்பவம்.அதை காரணம் காட்ட வேண்டாம்.

உங்களிடம் என்ன பொருளாதார கொள்கை உள்ளது. நாளுக்கு நாள் எகிறும் பொருட்களின் விலையை கூட உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்திய ,பாகிஸ்தான் என அணைத்து நாடுகளிடமும் கடன் வாக்குகிறீர்கள்.

இப்படி பிச்சை எடுப்பதற்கு உங்களுக்கு வெட்கம் இல்லையா?

நாட்டில் ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தால் அது பற்றிய இருப்பு எம்மிடம் சரியாக இருக்க வேண்டும்.

மாகாண சபைகளே இல்லாத நிலையில் அதற்கும் ஒரு சட்டம் கொண்டு வாறீர்கள்.

இந்த அரசு ஜோக் காட்டுகிறதா.மக்களின் நம்பிக்கையை இழந்த பின்னரும் இன்னமும் நாடகம் ஆடுகிறீர்கள் என்றார்.

Leave a Reply