
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் இலங்கை அரசு கை வைத்து விட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினை இன்றும் தீர்க்கப்படாத நிலையில், அவர்களை துன்பத்தில் உள்ளாக்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.
40 வருடமாக வியர்வை சிந்தி உழைத்த ஊழியர் சேமலாப நிதியில் 25 வீதத்தை அரசு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
திருமணம், வாகனம் வாங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு,அவர்கள் பல ஆண்டுகளாக நம்பி இருப்பது இந்த பணத்தையே.
அதிலும் நீங்கள் கைவைத்து விட்டீர்கள். பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக வந்தால் எல்லா பிரச்சினையும் தீரும் என நாம் நம்பினோம். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.
இது தவிர இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை மோசமாகி வருகிறது. வடக்கு கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வேண்டும்.
இந்தியாவை பகைக்க கூடாது. அவர்கள் பல வழிகளிலில் எமக்கு உதவி செய்துள்ளனர்.
இலங்கை தான் பொருளாதாரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.ஆனால் கோவிட் நிலைமையில் அமெரிக்காவை விட இந்தியா வளர்ந்துள்ளது.
ஏனென்றால் அவர்களின் நிர்வாக திறமை. இங்கு அவ்வாறு இல்லை.மக்களுக்கு நல்லது நடக்க நாமும் சேர்ந்து பயணிப்போம் என்றார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு





