
வடக்கு கிழக்கு முஸீம்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரிஸ் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று உள்ள தமிழ் தலைமைகள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை. இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
அதிலும் குறிப்பாக முஸ்லீம் மக்கள் இப்போது அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் கர்நாடகாவில் முஸ்லீம் பெண்கள் ஆடை அணிவதில் பிரச்சினைகள் எழுத்துள்ளன.
அதற்கு பல தரப்புகள் முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இங்கு முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் தமிழ் தரப்புகள் முன் வருவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே எங்கள் பிரச்சினையை நாம் ஒன்றாக சேர்ந்து தீர்த்துக் கொள்ள வேண்டும் ,குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு





