
திருகோணமலையில் இரண்டு கிராம் 300 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார்.
திருகோணமலை பகுதியில் இரண்டு கிராம் 300 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று (9) உத்தரவிட்டார்.
திருகோணமலை கொட்பே, சமூத்திராகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் திருகோணமலை நகரில் வைத்து இரண்டு கிராம் 300 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் நின்ற வேளை திருகோணமலை தலைமையக போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, சந்தேக நபருக்கெதிராக ஹேரொயின் போதைப்பொருள் வைத்திருந்த வழக்குகள் இரண்டு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு





