
யாழ் கடல் பரப்புக்களில் , மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு யார் எவ்வாறு விசாரணை செய்கின்றனர் என எவருக்கும் தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண கடல் பரப்புக்களில் இந்திய மீன்வர்களின் அத்து மீறல் அதிகரித்துள்ளது. இதனால் மாதகல் ,நெடுங்கேணி ,வல்வெட்டிதுறை ஆகிய பிரதேச மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் குடும்பம் இப்போது நடுத்தெருவில் நிற்கின்றனர் .சொதி வைப்பதற்கு சூடை மீன் கூட பிடிக்க முடியாத நிலையில் மீனவர்கள் உள்ளனர்.
இதற்கு யார் விசாரணை மேற்கொள்கின்றனர் என்றே தெரியவில்லை.வடக்கில் கடல் படை, இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாகாணங்களை விட வடக்கில் இராணுவத்தினர் அதிகமாக உள்ளனர். ஆனால் இவர்கள் யாரை பாதுகாக்கின்றனர்.
ஆகவே மீனவர்கள் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் தீர்வு காண வேண்டும்.இரண்டு நாட்டு மீனவர்களையும் மோத விட்டு வேடிக்கை பார்ப்பது போல எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
இலங்கை இந்திய மீனவர்கள் இணைந்து தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.கூட்டு சேர்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள். தமிழக மீனவர்களும் எமது உறவுகள் தான்.
நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் உலக நாடுகளுக்கு பாசாங்கு காட்டுவதற்கு பல பொய்களை கூறி வருகிறது.நாம் அரசுடன் பேசத் தயார்.
உங்களுக்கு திராணி இருந்தால் அழையுங்கள் ,தமிழ் மக்களின் நலனில் உள்ள தமிழ் தரப்புகள் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்றார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு





