
ஒரே வீட்டில் அடுத்தடுத்த நாளில் மகளும் தந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் – களுவங்கேணி பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் கிரிஷ்கா (வயது 17) ஆடைத்தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் நிலையில் அங்கு தன்னுடன் வேலை செய்யும் இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
மகளின் காதல் விவகாரம் தந்தைக்கு தெரிந்த நிலையில் அவர் அதனை கண்டித்துள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மகள் தனது உயிரை மாய்த்துள்ளார்.
யுவதி உயிரிழந்த நிலையில் அயலவர்கள் உறவினர்கள் , யுவதியின் உயிரிழப்புக்கு தந்தையே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் , யுவதியின் தந்தை இன்று புதன்கிழமை காலை தானும் உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு





