சட்ட ரீதியான பிரச்சினைகளை ஒழுங்கமைத்துத் தருமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் கடல் தொழிலாளர்கள் கோரிக்கை

கொழும்பு, பெப் 9: நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், தங்கள் பிரதேசங்களில் கடற் தொழில் செய்வதில் உள்ள சட்ட ரீதியான பிரச்சினைகளை ஒழுங்கமைத்துத் தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தக் கலந்துரையாடலில், தெஹிவளை பிரதேசத்தில் சுழியோடி சென்று அம்புகளை பயன்படுத்தி மீன் பிடிப்போர். களுத்துறையில் கரைவலை தொழில் ஈடுபடுவோர், உள்ளூர் இழுவைமடி வலைத் தொழிலாளர்கள் ஆகியோர் தாம் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்பாகவும், அதைத் தவிர்க்க மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சருடன் கலந்துரையாடினர்.

இதன்போது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்ட வரைபுகளுக்கு உட்பட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply