
ஊழியர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் அரசு கைவைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஊழியர் சேம இலாப நிதியிலிருந்து வரி அறவிடப்படும் விடயம் குறித்து எதிர்கட்சித் தலைவர் கூறினார்.இதுபோன்ற சம்பவங்கள் வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை.
இந்த நிலையில் மகளின் திருமணத்திற்கு செலவு செய்ய வேண்டிய பணம், வீடு வாங்கும் பணம், வங்கியில் சேமித்த பணம்,வீட்டைக் காப்பாற்ற நீங்கள் வைத்திருக்கும் பணம், ஓய்வூதியத்திற்கு பின்னர் நீங்கள் செலவழிக்க வேண்டிய பணம் என சேமித்த சகல பணத்திற்கும் வரி அறவிட தீர்மானித்துள்ளனர்.
இதுவரை எந்த அரசும் செய்யாத வேலை இது.இது முற்றிலும் மக்களுக்கு எதிரான செயலாகும்.மேலும் இந்த ஊழியர்களின் பண இருப்பை அரசாங்கமே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.ஆனால் அவற்றை கொள்ளையடிக்கிறது என்றார்.





