அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி

கொழும்பு, பெப் 9: கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட அணைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை தெரிவித்தார். மேலும், அரசின் கொள்கைகள் அனைத்தும் எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று அவர் தெரிவித்தார்.

அநுராதபுரம் சல்காடோ விளையாட்டரங்கில் நடந்த பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் “கல்வி, விவசாயம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு சவால்களை சந்தித்து வருகிறது. கொரோனா பரவலால் முடங்கியிருந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. மக்கள் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து பெற்றுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸையம் பெற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று மீண்டும் ஒருதடவை அதிகரித்து நாடு முடக்கப்படாத வகையில் மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உரங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாய விலை அதிகரிக்கப்படும் என்று நான் விவசாயிகளுக்கு உறுதியளித்தேன், அதை நிறைவேற்றுவதே எனது முதல் கடமையாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply