நாட்டில் மீண்டும் பொது முடக்கமா? வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது புதிய சுகாதார கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது முடக்கமொன்றுக்கு செல்லாமல் சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்குவது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்; தைரியம் இருந்தால் வாருங்கள்! – சிறீதரன் எம்.பி

Leave a Reply