
முந்தல் – ஆண்டிகம பிரதான வீதியின் அக்கரவெளி கருப்பு பாலத்திற்கு அருகில் இன்று இடம் பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் – அங்குனவில அக்கரவெளிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 53 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆண்டிகம பகுதியை நோக்கிச் சென்ற துவிச்சகக்ர வண்டியுடன், எதிர்த் திசையில் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் முந்தல் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தல் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







