கல்முனை 01 C…

கல்முனை 01 C பிரிவில் உள்ள அரசகாணியை மீண்டும் கைப்பற்ற முயற்சி – தடுத்து நிறுத்த ஒன்று கூடிய மக்களும் மாநகர சபை உறுப்பினர் ராஜன், மதகுரு – பொலிஸிலும் முறைப்பாடு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்முனை 01 C கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அரச காணியில் இன்று (09)சர்ச்சை ஏற்பட்டது.

குறித்த அரச காணியில் மக்களின் தேவை கருதி பொதுக்கட்டிடம் ஒன்று அமைப்பதற்கு மக்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில் கட்டிட ஒப்பந்தகாரர் அமைப்பினர் இங்கு அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை அமைக்க முற்பட்ட போது அங்கு இன்று குழப்பநிலை ஏற்பட்டது.

பொது மக்களும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், கல்முனை விகராதிபதி ரண்முத்துக்கல தேரர் ஆகியோர் ஆகியோர் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை காட்டினர். இதன் போது கட்டிடம் அமைக்க வந்த ஒருவரால் மாநகர சபை உறுப்பினர் ராஜன் அச்சுறுத்தப்பட்டுள்ளார். இவர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply