
ஆளுநரின் உறுதி மொழியை அடுத்து வட மாகாண சுகாதார பணி உதவியாளர்கள் தமது போராட்டத்தை இன்று நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் சுகாதார பணி உதவியாளர்களாக,நியமனம் வழங்கப்பட்டு இதுவரை, கடமைக்கு அழைக்கப்படாதவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடரச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்.
ஆளுநர் எமக்கு உறுதி மொழியொன்றை தந்துள்ளார்.
அதற்கு அமைவாக நியமனம் வழங்கப்பட்டவர்களின் பெயர்கள் பதியப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி பெயர்கள் உறுதிப்படுத்தப்படும்.
அதன் பின்னர் கொழும்பில் இருந்து அனுமதி கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அவரின் வார்த்தையை ஏற்று நாம் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்றனர்.





