நிரந்தர நியமனம் கோரி வடக்கு ஆளுநரை சந்திக்கவுள்ள சுகாதார தொழிலாளார்கள்

யாழ் மாநகர சுகாதார தொழிலாளார்கள் தமக்கான நிரந்தர நியமனம் கோரி வடக்கு மாகாண ஆளுநரை நாளை சந்திக்கவுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வட பிராந்திய தொழில் சங்க தலைவர் கருத்து தெரிவிக்கையில்:

நாட்டை தினமும் அழகு படுத்துவதில் சுகாதார தொழிலாளாளர்கள் தமது பங்கை வழங்கிவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் ஆளுநரை நாளை சந்திவுள்ளோம். அவர் எமக்கு சாதகமான பதிலை தருவார் என நம்பிகின்றோம்.

இன்று ஆளுநரை சந்திக்க சென்றோம் அது முடியவில்லை.நாளை மதியம் ஆளுநரை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாக அவரின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்திலும், இப்போது உள்ள விலைவாசிக்களுக்கு மத்தியிலும் தமது சுத்திகரிப்பு தொழிலை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பில் உரியவர்கள் பதில் தருவார்கள் என நம்புகின்றோம் என்றார்.

அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்; தைரியம் இருந்தால் வாருங்கள்! – சிறீதரன் எம்.பி

Leave a Reply