
கொழும்பு, பெப் 10: கோனாபீனுவல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கணவனால் தீயிட்டு எரிக்கப்பட்டடு கொல்லப்பட்டுள்ளார்.
பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி பலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக கோனாபீனுவல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கோனாபீனுவல வடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். அவர் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு மீனவராகாப் பணியாற்றி வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.





