தாயின் அனுமதியுடன் சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது!

பதுளையில் தாயின் அனுமதியோடு 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வயிற்று வலி காரணமாக குறித்த சிறுமி ஹாலிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் 4 மாத கர்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனவும், இரண்டாவது சந்தேக நபர் பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய 7 வயது பிள்ளையின் தந்தை எனவும் குறித்த சிறுமியின் தாயின் அனுமதியோடு இவர்கள் சிறுமியுடன் நெருங்கி பழகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பதுளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply