ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிராக மக்கள் தடியடி நடத்த வேண்டும்: ஆளும் கட்சி எம்பியின் சர்ச்சைப் பேச்சு

கொழும்பு, பெப் 10: ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் தடியடி நடத்த வேண்டிய நேரம் வந்துள்ளது என்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “இந்த ஆர்ப்பாட்டங்கள், அரசியல் உள் நோக்கங்களைக் கொண்ட சிறிய குழுவினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த போராட்டங்களுக்கு அரசு ஊழியர்கள் பலியாகக் கூடாது’ என்று அவர் தெரிவித்தார்.

நாட்டில் சுகாதார சேவை ஊழியர்கள் நடத்திவரும் ஆர்பாட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply