
சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக விவாதம் நடத்த நேரம் ஒதுக்குமாறு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் கோரினார்.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் நடத்திய பேச்சுவார்தையின் அறிக்கையை பணிப்பாளர் சபை மூன்றாம் வாரத்தில் வெளியிட இருக்கிறது.
எனவே, அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து எம்.பிகளுக்கு வழங்குமாறு கோருகிறேன். அரசின் நிதி குழுவுக்கும் அது குறித்து கவனம் செலுத்த முடியும். இதற்கு முன்னர் மூன்று நாட்கள் விவாதத்திற்கு காலம் ஒதுக்கினார்.
மார்ச் மாதம் இது பற்றி ஆராய காலம் ஓதுக்குமாறு கோருகிறேன். இதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ந்து பயனில்லை. அறிக்கை குறித்து ஆராய்ந்து சில விடயங்கள் குறித்து உடன்பாட்டுக்கு வரலாம்.
பெப்ரவரி மாதம் இது தொடர்பான அறிக்கையை வழங்கினால் மார்சில் அது பற்றி ஆராய முடியும். தற்பொழுதுள்ள நெருக்கடி நிலைக்கு எங்கிருந்தாவது தீர்வு வழங்க வேண்டும். இங்கு உடன்படும் விடயங்களை ஜனாதிபதிக்கு வழங்கலாம். – என்றார்.





