
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஹைரியா நகர் பகுயில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை நேற்றிரவு கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு வைத்திருந்த ஹைரியா நகரைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரிடமும் 100 மில்லி கிராம் ஹெரோயினும், 39 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரிடமிருந்து 30 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதோடு சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருப்பதாக மூதூர் சிறு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பினை மேற்கொண்டபோது ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





