<!–
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி, இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800 இற்கும் அதிகமான படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






