
நாட்டை விட்டு இளைஞர்கள், கல்வியாளர்கள் இப்போது வேகமாக வெளியேறிக்கொண்டு இருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா தெரிவித்துள்ளார்.
இந்த அரசு என்ன செய்கிறது. நாட்டின் எதிர்காலம் என்று சொல்லப்படும் இளைஞர்கள் படித்தவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இனம் மதம் சாதி என அனைத்து வழியாலும் நாம் பிரிந்து நிற்கின்றோம். நாட்டின் மூளை என்று சொல்லப்படும் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சர்வாதிகார ஆட்சியும், சகாக்களுக்காக சட்டத்தை மாற்றுதல், பணத்தை கொடுத்தல் போன்ற செயற்பாடுகள் தாரளமாக இப்போது இடம்பெற்று வருகிறது.
நேரம் வந்து விட்டது நாம் இப்போது சேர வேண்டும். அப்போது தான் நாமும் வெற்றி பெற்று நாட்டையும் வளப்படுத்த முடியும்.
பரம்பரை அரசியலை தகர்க்க வேண்டும். இராணுவ மற்றும் பொலிஸ் மயமாக்கலை தடுக்க வேண்டும். எம்மால் முடியும். உங்களால் முடியுமா. நாம் தெளிவாக தான் திட்டங்களை வைத்துள்ளோம். எம்முடன் சேருங்கள்.- என்றார்.





