
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வரி அறவிடும் யோசனையை இறைவரி ஆணையாளர் முன்வைத் திருந்தபோதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதை நிரா கரித்தேன் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உள்ள நிதியானது முதலீடு மூலம் பெறப்படும் வருமானம் என கருதப்படுவதால் அதற்கு வரி விதிக்க வேண்டும் என இறைவரி ஆணையாளர் இதற்கு முன்னர் கோரியிருந்தார்.
அது தவறான நிலைப்பாடாகும் எனக் கூறி, அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
இந்த வரி அறவிடப்படும் செயற்பாட்டுக்கு எனது அமைச்சும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது- என்றார்.





