
முன்பள்ளி ஆசிரியர்கள் தமக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரி, மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் துறை சார்ந்த தகைமைகளை நிறைவு செய்துள்ளனர். மூன்று வருடங்களுக்கு மேலாக சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனத்தைக் கோரி, ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். எனினும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போதைய வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ள வழங்கப்படும் கொடுப்பனவு போதாது. எனவே நிரந்தர நியமனத்தை வழங்குவதோடு, சம்பள உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கான மனு, மாவட்டச் செயலர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெலிடம் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.





