2 வருடங்களில் முகக்கவசத்துக்கு 18,000 கோடி ரூபா செலவு

இலங்­கை­யில் கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் முகக்­க­வ­சங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக சுமார் 18 ஆயி­ரம் கோடி ரூபா பணத்தை மக்­கள் செல­விட்­டுள்­ள­னர்.

இந்­தத் தக­வலை நுகர்­வோர் விவ­கார அமைச்­சின் சிரேஷ்ட அதி­ கா­ரி­யொ­ரு­வர் வெளி­யிட்­டுள்­ளார்.

கொரோனாப் பெருந்­தொற்று நிலைமை கார­ண­மாக, மக்­கள் அதிக பணத்தை முகக்­க­வ­சத்­துக்­ காக செல­விட்­டுள்­ள­னர். அதற்­க­மை­வாக நாள் ஒன்­றுக்கு 25 கோடி ரூபாவை செல­வி­டு­கின்­ற­ னர் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

வாழ்க்­கைச் செலவு அதி­க­ரித்­துள்ள போதும், தொற்­றி­லி­ருந்து பாது­காத்­துக்­கொள்ள அனை­வ­ரும் நாளாந்­தம் முகக்­க­வ­சம் அணிய நேரிட்­டுள்­ளது. எனவே முகக்­க­வ­சங்­க­ளுக்கு கட்­டுப்­பாட்டு விலையை நிர்­ண­யிப்­ப­தன் மூலம், மக்­க­ளின் சுமை­யைக் குறைக்க முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply