கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா ஆகியவை அணிந்து வர இந்துத்துவா அமைப்பினரால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக முஸ்லிம் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், இந்துத்துவா அமைப் பின் சித்தாந்தங்களுக்கு எதிராகவும் 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்துத்துவா அமைப்பினர் காவி நிறத் துண்டு அணிந்து ‘ஜெய் சிறிராம்’ என கோஷம் எழுப்பிவரும் நிலையில், மாணவிகள் அவர்களுக்கு எதிராக ‘அல்லாஹூ அக்பர்’ என்ற கோசத்தை எழுப்பி வருகின்றனர்.

கர்நாடகாவின் பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார ஆகிய மாவட்டங்களிலும் போராட் டம் தீவிரமாகப் பரவியுள்ளது. அங்கு கலவரங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டப் படுகின்றது.
இதையடுத்து அடுத்த 3 நாள்களுக்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பதற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அறிவிப்பு பாதுகாப்புத் தரப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர இந்துத்துவா சித்தாந்தத்துடன் தொடர்புடைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் முக்கியஸ்தர்கள் ஜெய்சிறிராம் என்ற கோஷத்துடன் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸூம் ஏனைய சிறுபான்மை மதக் கட்சி
களும் காவிக் கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கண்டித்ததுடன் முஸ்லிம் மாணவர்களுக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.





