
நாட்டில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போது தான் குற்றங்கள் குறையும் என நாடளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் வழக்குகள் தாமதமாக நடைபெறுகின்றன. முதலில் அவை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நேற்றும் மரக்கறி விற்பனை நிலையத்தில் பட்டப்பகலில் மிக இலவாகுவாக கொள்ளையடித்து விட்டுச் செல்கின்றனர். இதற்கு யார் காரணம். தவறு செய்தால் தண்டனை கடுமையாக இருக்கும் என்ற பயம் வந்தாலே, நாட்டில் பாதி குற்றங்கள் குறைந்து விடும்.
ஆகவே, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். நீதிமன்றம் சென்றால் உடனே தீர்வு கிடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரவேண்டும்.
வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு நவீன முறைகள் அநேகமானவை வந்து விட்டன. அவற்றையும் நாம் பயன்படுத்த வேண்டும். நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். – என்றார்.





