யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

யாழ். பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

அடிப்படை சம்பள அதிகரிப்பு, ஊழியர்களின் பிணக்கு தொடர்பில் விரைவான தீர்வு உள்ளிட்ட விடயங்களை வலுயுறுத்தி இன்று பல்கலைக்கழக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, ஆட்சிக்கு வரும் போது சம்பள பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறினீர்கள் அந்த வாக்குறுதி என்ன ஆச்சு, அமைச்சரவை உபகுழுவின் முடிவை சம்பள ஆணைக்குழு நிராகரிப்பது ஏன் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த போராட்டத்தில் தேவை நிமித்தம் கருதி பாதுகாப்பு பணியாளர்கள், நீர் சேவை பணியாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

Leave a Reply