
உயிரிழந்த சிறுவன், உயிர்த்தெழுவான் என நம்பி சிறுவனின் சடலத்துடன் கடந்த 3 நாட்களாக பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் படல்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆதிமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவலின் பிரகாரம் அவ்வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, வீட்டின் அறை ஒன்றில் பழுதடைந்த நிலையில் சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அதனையடுத்து வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் பாட்டியை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, சிறுவன் சளி காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், அவனுடைய நோய் குணமடைய இறைவனை தாம் பிரார்த்தித்து வந்ததாகவும், கடந்த 7ஆம் திகதி சிறுவன் உயிரிழந்த போதிலும், அவன் மீண்டும் உயிர்த்தொழுவான் என தாம் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





