
கோட்டா அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கான சம்பளத்தை கொடுப்பதற்கு பணம் இல்லை. அதற்காகவே ஊழியர் சேமலாப நிதியில் கை வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியின் 25 வீதத்தை பெற்றுக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்த அமைச்சின் பெயரும் இல்லை.
நிதி அமைச்சரின் அரசியல் நோக்கத்துக்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டு மக்களின் உழைப்பு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நாம் இதனை எதிர்க்கின்றோம்.
உங்களின் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு பணம் இல்லை. ஆகவே அதற்கு மக்களின் சேமிப்பு பணத்தை சுரண்ட பார்க்கிறீர்கள்.
ஜனாதிபதி உடனடியாக இந்த வர்த்தமானி அறிவித்தலை நிறுத்த வேண்டும். இல்லையேல் நாம் உங்களுக்கு ஏதிராக போராட தயாராக இருக்கின்றோம். – என்றார்.





