மட்டு. களுவங்கேணியில் தந்தையும் மகளும் தற்கொலை!

17 வயது  சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி மாலையில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து சிறுமியின் தந்தையார் காலையில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று (புதன்கிழமை ) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்  பொலிஸார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷிகா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் என்பவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை வீட்டில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி தற்கொலைக்கு காரணம் சிறுமியின் தந்தையார் என அந்தபகுதி அயலவர்கள் பேசத்தொடங்கியதையடுத்து சிறுமியின் தந்தையார்  நேற்று காலையில் வீட்டின்  அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்ப்டுள்ளதாக  பொலிஸார்  ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply