அமைச்சர் டக்ளஸக்கு முதுகெலும்பில்லை – சபையில் கஜேந்திரகுமார்

இலங்கை கடல் படையை நம்பி, வடக்கு மீனவர்கள் கடலுக்கு இனி வரும் காலங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

வடக்கு கடல் படை, மீனவர்களை பாதுகாக்கும் நிலையில் இல்லை.மக்களின் காணிகளை அபகரிப்பதே அவர்களின் நோக்கம்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்தாலும் அதையும் இலங்கை கடல் படை பார்த்துக்கொண்டிருக்கும்.

அவர்கள் வேண்டுமென்றே இதை செய்கின்றனர். இது எல்லாம் திட்டமிட்டு வடக்கில் நடைபெறும் கொடூரம்.

வடக்கைச் சேர்ந்த தமிழ் அமைச்சர் மீன் பிடி துறைக்கு இதற்கு பொறுப்பாக உள்ளார்.

அவருக்கு முதுகெலும்பில்லை. அவரால் ஒன்றும் செய்ய முடியாது.அவருக்கு மேலே பலர் உள்ளனர்.ஆகவே மீனவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம்.அநீதிக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம் என்றார்.

Leave a Reply