
நிதி அமைச்சரின் சரியான திட்டமிடலில் வன்னி தேர்தல் பிரிவு துரிதமாக முன்னேறி வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியதன் படி, இப்போது கிராம மட்டத்தில் அபிவிருத்தி துரிதமாக இடப்பெற்று வருகிறது.
நிதி அமைச்சர் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் ஆகியோர் மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர்.
ஆனால் கஜேந்திரகுமார் அணி காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறனர்.
அத்துடன் இளைஞர்களை உசுப்பேத்தி மீண்டும் வன்முறைக்கு அழைத்துச் செல்கின்றனர் என்றார்.
இதன் போது குறுக்கிட்ட கஜேந்திரன் எம்.பி:
அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஈ.பி.டி.பி அணியினர் மக்களை கொன்று குவித்தவர்கள். டக்ளஸ் விரைவில் தூக்கில் தொங்குவார் என்றார்.
சண்முகா பாடசாலை விவகாரம்; ரவூப் ஹக்கீமை சந்தித்த முஸ்லீம் ஆசிரியை





