சிறையில் உள்ள இளைஞர்கள் தொடர்பில் ரிசாத் கூறிய அதிர்ச்சித் தகவல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் நிலை மோசமடைந்து செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சிலரை நான் சிறையில் பார்த்திருக்கின்றேன். அவர்கள் என்ன விடயத்துக்கு கைது செய்யப்பட்டார்கள், என்ன வழக்கு என்றே அவர்களுக்கு தெரியவில்லை.

நீண்ட காலமாக அவர்களின் வழக்கு கிடப்பில் உள்ளன. சிறையில் இருக்கும் இளைஞர்களின் நிலை என்பது ஆபத்தானது. ஏனென்றால் உள ரீதியாக பாதிக்கப்பட்ட அவர்கள் வன்முறையாளர்களாக மாறலாம். ஆகவே இந்த ஆபத்தான நிலையிலிருந்து இளைஞர்களை மீட்க வேண்டும். – என்றார்.

Leave a Reply