
நாட்டில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் இன்று வரையில் நீக்கப்படவில்லை.
ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதியே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அது தமிழர்களையும்,ஊடகவியலாளர்களையும்,கல்வியாளர்களையும், கைது செய்வதற்கு பயன்படுகிறது.
கைது செய்யப்படுவர்கள் பலர் மீது இன்னமும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
உண்மையில் இந்தச் சட்டம் எதற்கு?.பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சட்டத்தில் சிறிய திருத்தம் செய்யப்படுவதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதை வரவேற்கின்றோம். ஆனால் இந்த சட்ட்ம் திருத்தப்படுவதால் என்ன நன்மை என்று அவர் விளக்க வேண்டும்.
கவிதை எழுதினால்,கருத்து தெரிவித்தால் கைது என்ற நிலைமை தற்போது உள்ளது என்றார்.





