
கொழும்பு, பெப் 10: ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ வியாழக்கிழமை தனது மேயர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
வியாழக்கிழமை காலை ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் எராஜ் பெர்னாண்டோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட விரும்புவதால் பதவி விலக தீர்மானித்ததாக அவர் மேலும் கூறினார்.





