
2022 ம் ஆண்டுக்கான உலக சமாதான உச்ச மாநாட்டை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன தென் கொரியாவிற்கு சென்றுள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் கம்போடியா பிரதமர் ஆகியோரால் 157 பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சமாதானத்திற்கான உலக உச்சி மாநாட்டின் ஆரம்ப விழாவில் முக்கிய உரையை ஆற்றுவதற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டார்.
இந்த அழைப்பை ஏற்று இன்று காலை சிங்கப்பூர் விமானம் SQ469ல் தென்கொரியாவுக்கு முன்னாள் ஜனாதிபதி சென்றுள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்த அரச தலைவர் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் மதிக்கப்படும் மைத்திரி பால சிரிசேனவிற்கு ஐக்கிய நாடுகள் சபை தனிப்பட்ட முறையில் அழைப்பொன்றை விடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெறவுள்ள அமைதிக்கான உலக உச்சி மாநாடு மற்றும் பல நாட்டுத் தலைவர்களை முன்னாள் ஜனாதிபதி தனது பயணத்தின் போது சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டிற்கு மீண்டும் 14ஆம் திகதி நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.





