
மீனவர்களுக்கு வெள்ளையடிக்கும் நடவடிக்கையில் அமைச்சர் டக்ளஸ் ஈடுபட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சபையில் தெரிவித்துள்ளார்.
யாழ் கடல் பரப்புக்களில் எமது மீனவர்கள் கொல்லப்படுகின்றனர்.அதற்கு இந்திய மீனவர்கள் மற்றும் கடல் படை காரணம்.
ஆனால் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை வேண்டும் என்றே இலங்கை கடல் படை அனுமதிக்கிறது.
மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது.மீனவர்கள் சார்பில் கதைப்பதற்கு தமிழ் அமைச்சர் இங்கு உள்ளார்.
அவர் இன்னமும் தீர்வு வழங்கவில்லை.அரசுடன் சேர்ந்து மீனவர்களை வெள்ளையடிக்கப் பார்க்கின்றார்.
மீன்வர்களின் போராட்ட களத்துக்குச் சென்ற அவர் பச்சை தண்ணீர் கூட மீனவர்களுக்கு கொடுக்கவில்லை என்றார்.





