அரச கடன் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொதுக் கணக்குகளுக்கான குழுவிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

கொழும்பு, பெப் 10: அரச கடன், கடன் சேவைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொதுக் கணக்குகளுக்கான குழுவிடம் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை அவர் பேசியது: நாடாளுமன்றம் நிதிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாகும். அரச கடன், கடன் சேவைகள் தொடர்பான தகவல்களை நாங்கள் பலமுறை கோரியுள்ளோம். ஆனால், இந்த விபரங்கள் வழங்கப்படவில்லை.

இலங்கையின் கையிருப்பு 1 பில்லியன் டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கைப் பிரதிநிதியுடனான சந்திப்பின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அரச கடன், கடன் சேவைகள் தொடர்பான அறிக்கையை பொதுக் கணக்குகளுக்கான குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply